அஹிம்ஷா நிறுவனத்தினால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு.......

 அஹிம்ஷா நிறுவனத்தினால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு.......

அஹிம்ஷா நிறுவனத்தின் முயற்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக பணியின் கீழ் மட்டக்களப்பு கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலக பிரிவில் ஐயப்பன் இல்ல சிவனடியான் மற்றும் ஐயப்பன் இல்ல ரவீந்திரன் கௌரி ஆகிய குடும்பங்களின் நிதி பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பு மாவடிவேம்பு மற்றும் பாலையடித்தோனா ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்றது .

மட்டக்களப்பு கோறளைப்பற்று கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடித்தோனா ஜீவபுரம் மற்றும் மாவடிவேம்பு செங்கலடி ஆகிய கிராம சேவையாளர் கிராமங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு உதவும் முகமாக கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி மற்றும் கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி ஆகியோரினால் அஹிம்ஷா நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விஜயராஜாவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஐயப்பன் இல்ல சிவனடியான் மற்றும் ரவீந்திரன் கௌரி குடும்பங்களின் நிதி பங்களிப்பில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிக்கு இன்று கையளிக்கப்பட்டது .

அஹிம்ஷா நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விஜயராஜா தலைமையில் நடைபெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக ஐயப்பன் இல்ல ஸ்தாபகர் கனடா என் சந்திர மோகன் கலந்துகொண்டு வீடுகள் திறந்து வைக்கப்பட்டு வீட்டுக்கான ஆவணங்களும் வீட்டுக்கான தளபாடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது

இந்நிகழ்வில் அஹிம்ஷா நிறுவனத்தின் செயலாளர் டி.ராஜ் மோகன் உட்பட அஹிம்ஷா நிறுவனத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன

Comments