மாவடிவேம்பு சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தெரிவு.....
சமுர்த்தி வங்கிகள் கட்டாயம் வருடந்தோறும் தம் வங்கியின் புதிய கட்டுப்பாட்டுச் சபையை தெரிவு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் சகல சமுர்த்தி வங்கிகளும் 2023ம் ஆண்டுக்கான புதிய கட்டுப்பாட்டு சபைகளை தெரிவு செய்து வருகின்றன.
இதன் அடிப்படையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி 2023ம் ஆண்டுக்கான தம் புதிய கட்டுப்பாட்டு சபையின் புதிய தெரிவுகளை அன்மையில் நடாத்தி இருந்தது
இப்புதிய தெரிவுக்கான கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளரும், முகாமைத்துவ பணிப்பாளருமான S.இராசலிங்கம், மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் S.சுதர்சினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment