காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிரமதான நிகழ்வு......

 காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தின் சிரமதான நிகழ்வு......

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலய நிர்வாகம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சிரமதானப் பணிகள் (15) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது.
அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் என பலர் இந்நிகழ்வில் பங்குபற்றி இருந்தனர்.
பாடசாலையின் வடக்குப்புறமாக இருக்கின்ற இரண்டு மாடி கட்டடத்தின் மேல்மாடி பயன்படுத்தப்பாடாத நிலையில் இருந்தது. அங்கு சேதமடைந்திருந்த கதிரை, மேசைகள் தரம் பிரிக்கப்பட்டு தூசி, ஒட்டடை, பறவைகளின் எச்சம் என்பன துப்பரவு செய்யப்பட்தோடு பூரணமாக கழுவி பாவனைக்கு உகந்த நிலைக்கு மாற்றப்பட்டன.
இச்சிரமதான நிகழ்வில் பங்குபற்றிய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.



Comments