மஞ்சந்தொடுவாய் கிராம சேவையாளர் பிரிவில் வடிகான் புனரமைப்பு பணிகள்......
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் வடக்கு பாடசாலை வீதியின் இரண்டாம் குறுக்கு வீதிக்கான வடிகான் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மஞ்சந்தொடுவாய் வடக்கு 168 கிராம சேவையாளர் பிரிவு பாடசாலை வீதியின் இரண்டாம் குறுக்கு வீதியினை பயன்படுத்தும் அப்பிரதேச மக்களினால் 16 ஆம் வட்டார மாநகர சபை உறுப்பினர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய 16 ஆம் வட்டார உறுப்பினர்களினால் மாநகர முதல்வரின் கவனத்திற்கு குறித்த வடிகான் புனரமைப்பு தொடர்பாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் மாநகர முதல்வரினால் 22 ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் குறித்த வீதிக்கான வடிகான் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் வடக்கு 168 கிராம சேவையாளர் பிரிவில் மட்டக்களப்பு மாநகர சபையினால் 22ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்.
Comments
Post a Comment