புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தெரிவு......

 புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தெரிவு......

நாடளாவிய ரீதியில் 2023ம் ஆண்டுக்கான சமுர்த்தி வங்களின் புதிய கட்டுப்பாட்டு சபைகள் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. 

இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கி வரும் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியின் 2023ம் ஆண்டுக்கான  புதிய வங்கிக் கட்டுப்பாட்டுச்சபையின்  நிருவாகத் தெரிவுக்கூட்டம்  (24)ம் திகதி முகாமையாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் அவர்களின்  மேற்பார்வையில் இடம்பெற்றது. இதில் 08 கிராம சேவகர் பிரிவிலிருந்தும் 15 உறுப்பினர்கள் இதில் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், பொருளாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






Comments