பெண்களுக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கு இரு நாள் பயிற்சி செயலமர்வு!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி செயலமர்வு இன்று (19) கல்லடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தி வலுவுட்டுவதற்காக செரி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இடம் பெற்றது.
மண்முனை வடக்கு, வாழைச்சேனை, செங்கலடி, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 10 சிறுவர் கழகங்களை சேர்ந்தவர்களுக்கும், சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு பிரிவினர், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், இளைஞர் சேவைகள் அதிகாரிகளுக்கும் இந் நிகழ்வில் பயிற்சி வழங்கப்பட்டுவருகின்றது.
கிரிக்கெட் விளையாட்டின் துடுப்பாட்ட நுட்ப முறைகள் மற்றும் துடுப்பாட்ட பயிற்சி, வேகப்பந்து, சுழல் பந்து முறைகள் பற்றியும் களத்தடுப்பாட்ட நுட்பங்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டது.
Comments
Post a Comment