வாகரை ஊரியன் கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்....

 வாகரை ஊரியன் கட்டு பிரதேச மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கல்....

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தினத்தினை முன்னிட்டு வாகரை ஊரியன் கட்டு பிரதேச மக்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கு நிகழ்வு மட்/கல்குடா ஊரியன் கட்டு பாடசாலை மண்டபத்தில் இன்று (10) நடைபெற்றது.

பாடசாலை அதிபர் மங்களதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் கௌரவ அதிதிகளாக வாகரை பிரதேச 233 ஆவது படைப் பிரிவின் பிரிக்கேடியர் வசந்த கேவகே. நாவலடி கஜபா ரெஜிமன்ட படைப்பிரிவின் உயர் அதிகாரி லசந்த கல்குடா வலயக் உள வளத் துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் விஷ்வ ஜித்தன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது சுமார் 200 குடும்பகளுக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. புலம்பெயர் நாடான பிரான்ஸ் நாட்டில் தமிழர் புணர்வாழ்வு கழகத்தினர் இதற்கான நிதி அனுசரனையினை வழங்கியிருந்தனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை கவனத்தில் கொண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவு செய்யப்பட்டு இவ் மனித நேய உதவி வழங்கி வைக்கப்பட்டது.

Comments