புதுநகர் விக்னேஸ்வரா வித்தியாலய வளாகம் மற்றும் பொது மைதானத்தில் சிரமதான பணிகள்....
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுநகர் விக்னேஸ்வரா வித்தியாலய வளாகம் மற்றும் பொது மைதானத்தில் (07)ஆம் திகதி சிரமதானப் பணிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களின் ஆலோசனைக்கமைவாக உதவிப்பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கிணங்க நடைபெற்றது.
இச்சிரமதான பணிகளில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அவர்களின் தலைமையின் கீழ் புதுநகர். திமிலைதீவு, சேத்துக்குடா பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள், புதிய நண்பர்கள் எனும் விளையாட்டுக்கழகம், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர், பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. உதவிப்பிரதேச செயலாளர் களஆய்வை மேற்கொண்ட போது பல குறைபாடுகள் மற்றும் சமூக சீர்கேடுகளும் காணப்பட்டமையினால் அதனை நிவர்த்தி செய்யும் முகமாக இவ்சிரமதான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment