இளைய தளபதி விஜய் படத்தில் யாழ்ப்பாண ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு!

 இளைய தளபதி விஜய் படத்தில் யாழ்ப்பாண ஜனனிக்கு கிடைத்த வாய்ப்பு!

  பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி இளைய தளபதி விஜய் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு படத்திற்கு பின் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கிறார். விஜய்யின் 67வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. எனினும் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வாரிசு படத்திற்காக இது நாள் வரை படத்தின் அப்டேட் வெளியிடாமல் இருந்து வந்த லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இனி ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனியும் இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தில் இவர் விஜய்யின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா தமிழ் படங்களில் நடித்து வரும் நிலையில் ஜனனியும் தமிழ் படங்களில் நடிக்க களமிறங்கி உள்ளார்.

அதேவேளை லாஸ்லியா தமிழ் படங்களில் தலைகாட்டத் தொடங்கி இருந்தாலும் மாஸ் ஹீரோக்கள் படங்களில் இன்னும் வாய்ப்புக்கிடைக்கவில்லை.  

Comments