வவுணதீவு பரமேஷ்வரா பாடசாலையில் இளைஞர் கழகம் அங்குரார்ப்பணம்......
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பாடசாலைகள் தோறும் இளைஞர் கழகங்களை அமைக்கும் பணிகள் நடைமுறைப்படுத்துகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவு வவுணதீவு பரமேஷ்வரா பாடசாலையில் இளைஞர் கழகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கணேசமூர்த்தி சசீந்திரன் தலைமையில் பாடசாலை அதிபர் என்.கதிர்காமத்தம்பி, ஆசிரியர் என்.நவேந்திரகுமார் ஆகியோர் மற்றும் மாணவர்கள் பங்குபற்றலுடன் இந்த இத்திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களின் அனுமதியுடன் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் பணிப்பிற்க்கு அமைவாக வலயக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டம் தோறும், மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment