மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி நலன்புரிச்சங்க ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும்....

 மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி நலன்புரிச்சங்க ஒன்றுகூடலும், கௌரவிப்பு நிகழ்வும்....

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் 07.01.2023 அன்று 2022ம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும்  நலன்புரிச்சங்க தலைவருமான S.புவனேந்திரன் தலைமையில் நாவலடி கடற்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கடந்த 08 வருடங்களாக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றி இடமாற்றலாகி செல்லும் கு.சசிதரன் அவர்களை கௌரவித்து சினைவுச்சின்னம் வழங்கப்பட்டதுடன் அவரின் சேவையை பாராட்டி சிறப்புரைகளும் இடம் பெற்றது. இதன் போது பணி செய்து சோர்வடைந்து இருந்த உத்தியோகத்தர்களை மகிழ்விக்க சிறப்பு போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் ஒவ்வொருவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது. 





















Comments