கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தற்காலிக தடை நீக்கம்......
ஜே. ஸ்ரீ ரங்கா தலைமையில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை கால்பந்து சம்மேளனம் தங்களது பதவிகளை பொறுப்பேற்பதற்கு எதிராக போடப்பட்டிருந்த தற்காலிக நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கை கால்பந்து சம்மேளத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் வழங்கியிருந்த மனுவிற்கு அமைய, ஜே.சிறிரங்கா தலைமையிலான புதிய கால்பந்து சம்மேளனம் தங்களது பொறுப்புக்களை ஏற்பதற்கு தற்காலிக தடையுத்தரவு கடந்த புதன்கிழமை (18) நீதிமன்றம் மூலமாக வழங்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தற்காலிக தடையுத்தரவானது மேன்முறையீட்டு நீதிமன்ற ஆணை மூலமாக தற்போது நீக்கப்பட்டிருக்கின்றது. எனவே சிறிரங்கா தலைமையிலான புதிய கால்பந்து சம்மேளனம் தங்களது பொறுப்புக்களை முன்னெடுக்க முடியும் எனக் கூறப்படுகின்றது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தன்னை கால்பந்து சம்மேனத்தின் பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தியே முன்னர் நீதிமன்றத்திற்கு மனு சமர்ப்பித்திருந்தது.
இதேநேரம் ஜே.சிறிரங்கா தலைமையிலான தரப்பு கடந்த வாரம் விமர்சனங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment