இலங்கையில் சினிமாவை மிஞ்சிய சம்பவம் ! நடந்தது என்ன?
கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கிக்குள் (25) அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த மூகமூடியணிந்த நான்கு கொள்ளையர்கள் ATM இயந்திரத்தை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை காட்டி காவலாளியை அச்சுறுத்தி கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை (ATM) கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர் கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
நடந்தது என்ன?
கம்பளை கண்டி வீதியில் அமைந்துள்ள குறித்த வங்கிக்கு (25) அதிகாலை ஒரு மணியளவில் KDF ரக வேன் ஒன்றில் வந்த முகமூடி கொள்ளையர்கள், வேனை வீதிக்கு குறுக்காக நிறுத்திவிட்டு நிலையில் ஆயுதங்களுடன் வங்கிக்குள் புகுந்துள்ளனர்.
இதனையடுத்து காவலாளியின் தலையில் துப்பாக்கியினை வைத்து கதிரையுடன் கட்டிவைத்துவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை கழட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அத்துடன், கொள்ளைக்கு பயன்படுத்திய வேனின் இலக்கத்தினையும் பொலிஸாருக்கு வழங்கியுள்ளார், அதேவேளை மேற்படி கொள்ளையிடம் பெற்ற வங்கிக்கு அருகிலேயே மேலும் இரண்டு வங்கிகள் அமைந்துள்ளது.
அதன் பின்னர் காவலாளி தன்னை கட்டியிருந்த கயிற்றினை கழட்டிக் கொண்டு வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை மணியினை அழுத்தியதையடுத்து அங்கு வந்த பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டனர் .
மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரதீப் ரட்ணாயக்கவின் ஆலோசனைக்கமைய கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பிரணாந்து தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment