நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு பற்றிய கள ஆய்வை மேற்கொள்வது தொடர்பாக செயலமர்வு........
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ளத் தகுதியான நபர்கள் குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கள ஆய்வை மேற் கொள்வது தொடர்பாக கள உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது சமுர்த்தி நிவாரண நலன்புரி உதவிகள் உட்பட நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ளத் தகுதியான நபர்கள் குடும்பங்களை தெரிவு செய்வதற்கான கள ஆய்வை மேற் கொள்வது தொடர்பாக இதன் போது செயற்பாட்டு ரீதியாக விளக்கமளிக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம். எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment