கம்பஹாவில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் கைது....

 கம்பஹாவில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வியாபாரிகள் கைது....

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 7 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் முட்டை விற்பனைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், கிரிபத்கொட, களனி, மாகொல மற்றும் பட்டிய சந்தி ஆகிய பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையிலான விலையில் வியாபாரிகள் விற்பனை செய்வதாக தெரியவந்ததையடுத்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Comments