காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் சேவை நலன் பாராட்டு விழா........
காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் சேவை நலன் பாராட்டு விழா பாலமுனை சியாத் தோட்டத்தில் இடம்பெற்றது.
தேசிய உற்பத்தி திறன் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலகம் 2ம் இடத்தை பெற்றமைக்காக பிரதேச செயலாளரின் வழி காட்டலின் கீழ் சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் உரித்தான உயரிய கௌரவம். ஆவணம் உத்தியோகத்தர்களுக்கு இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர். தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்.எம். எஸ்.சில்மியா கணக்காளர் சித்திரா, நிருவாக உத்தியோகத்தர் ஜாயிதா ஜலால்தீன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உத்தியோகத்தர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன
Comments
Post a Comment