மத்தேயுஸ் பெர்னாண்டஸுக்கு 77 லட்சம் யூரோ இழப்பீடு வழங்குமாறு பார்சிலோனாவுக்கு நீதிமன்றம் உத்தரவு......
மத்தேயுஸ் பெர்னாண்டஸுக்கு 77 லட்சம் யூரோ இழப்பீடு வழங்குமாறு பார்சிலோனாவுக்கு நீதிமன்றம் உத்தரவு......
பிரேஸில் கால்பந்தாட்ட வீரர் மத்தேயுஸ் பெர்னாண்டஸுக்கு 77 லட்சம் யூரோ (இலங்கை ரூபா சுமார் 304 கோடி /இந்திய ரூபா சுமார் 70 கோடி) இழப்பீடு வழங்குமாறு பார்சிலோனா கழகத்துக்கு ஸ்பானிய உத்தரவிட்டுள்ளது. தன்னை முறையற்ற வகையில் கழகத்திலிருந்து நீக்கியமைக்கு எதிராக குற்றம் சுமத்தி, மத்தேயுஸ் பெர்னாண்டஸ் தொடுத்த வழக்கிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 24 வயதான மத்தேயுஸ் பெர்னாண்டஸ், 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரேஸில் அணிகளின் சார்பில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர். பிரேஸிலின் போட்டாபோகோ மற்றும் பல்மெய்ராஸ் கழகங்களின் சார்பிலும் விளையாடிய அவரை ஸ்பெய்னின் பார்சிலோனா கழகம் 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. 5 வருடகாலம் அக்கழகத்தில் விளையாடுவதற்கு மெத்தேயுஸ் இணக்கம் தெரிவித்தார்.
2021 ஏப்ரலில், யுக்ரைனின் டைனமிக் கியீவ் கழகத்துக்கு எதிரான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் போட்டியொன்றில் மாற்று வீரராக களறமிறங்கி இறுதி 17 நிமிடங்கள் மாத்திரம் அவர் விளையாடினார். பார்சிலோனா கழகத்தின் சார்பில் அவர் விளையாடிய ஒரேயொரு போட்டி இது. அச்சுற்றுப்போட்டியில் பார்சிலோனா சம்பியனாகியது.
2021 ஜூன் மாதம், மெத்தேயுஸ் பெர்னாண்டஸுடனான ஒப்பந்தத்தில் 4 வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில், அவரை பார்ஸிலோனா கழகம் ஒருதலைபட்சமாக நீக்கியது. இதனால் பார்சிலோனா கழகத்துக்கு எதிராக மெத்தேயுஸ் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த ஸ்பெய்னின் கட்டலோனியா பிராந்திய உச்சநீதிமன்றம் மெத்தேயுஸ் பெர்னாண்டஸுக்கு 77 லட்சம் யூரோவை பார்சிலோனா கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை தனது புகழுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக மேலம் 50 லட்சம் யூரோ வழங்க வேண்டும் என மெத்தேயுஸ் பெர்னாண்டஸ் விடுத்தகோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேற்படி தீர்ப்புக்கு எதிராக பார்சிலோனா கழகம் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment