650,000 ரூபா பெறுமதியான சமுர்த்தி ரண்விமன வீடுக்கான நிதி 750,000 ரூபாவாக அதிகரிப்பு....

 650,000 ரூபா பெறுமதியான சமுர்த்தி ரண்விமன வீடுக்கான நிதி 750,000 ரூபாவாக அதிகரிப்பு.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி பயனுகரிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிதி 2023 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வருடந்தோறும் சமுர்த்தி பெறும் பயனாளிகளுக்கு பல்வேறு வகையான வீடுகளை அமைத்துக் கொடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் லொட்டறி வீட்டுத்திட்டம், திரியபியச விட்டுத்திட்டம், சௌபாக்கியா வீட்டுத்திட்டம்  என பல்வேறு வகையான வீடமைப்பு வேலைத்திட்டங்களை செய்து வருகின்றது.

சௌபாக்கியா வீட்டுத்திட்டத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 650,000 பெறுமதியான வீடு ரண்விமன எனும் பெயரின் கீழ் 750,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 125,000 ரூபாய் பெறுமதியான வீடு ஜயவிமன எனும் பெயரின் கீழ் 250,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டுத்திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் 03 வீடுகள் எனும் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் 2023ம் ஆண்டு நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Comments