இருவேறு விபத்துக்களில் 6 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் பலி....
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (ஜன 24) இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 06 வயது சிறுமியும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் கம்பிரிகஸ்வெவ பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து இருந்து மாணவி ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக தவறி விழுந்துள்ளார். இதன் போது காயமடைந்த 06 வயதுடைய சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எம்பிலிப்பிட்டிய- இரத்தினபுரி பிரதான வீதியின் உடகம வீதியில் மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்திய 28 வயதுடைய இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் வேன் சாரதி உள்ளிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Post a Comment