தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/ மம/ அல் - ஹஸனாத் வித்தியாலயம் முதலிடம்!!

 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/ மம/ அல் - ஹஸனாத் வித்தியாலயம் முதலிடம்!!

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி வலய காத்தான்குடி கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/அல் - ஹஸனாத் வித்தியாலயத்தில் இருந்து தோற்றிய 15 மாணவர்களில் 3 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து வெட்டு புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களாக R.பாத்திமா இர்ஷா 155, N.A.முஹம்மட் நசூரி 151 மற்றும் M.D.முஹம்மத் சரப் 144 புள்ளிகளைப்பெற்று மூன்று மாணவர்கள் சித்தியடைந்து 20 வீதம் சித்தியைப் பெற்று மத்திய வலய காத்தான்குடி கோட்டத்திற்குட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலைகளுள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
பின் தங்கிய நிலையில் காணப்பட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடையும் மாணவர்களின் அடைவு மட்டம் தற்போதய பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் கீழ் ஆறு வீதத்தில் இருந்து இருபது வீதம் வரை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.
மேலும் மட்டக்களப்பு மத்தி வலயத்திக்குட்பட்ட காத்தான்குடி கோட்டத்தின் கீழ் உள்ள 16 ஆரம்பப்பிரிவுப் பாடசாலைகளில் மட்/மம/அல் - ஹஸனாத் வித்தியாலயம் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைவு மட்ட வீதத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments