வெளிநாடு செல்லும் பணியாளர்களின் 56% ஆனோரின் கல்வித்தகைமை O/L வரை மட்டுமே........

 வெளிநாடு செல்லும் பணியாளர்களின் 56% ஆனோரின் கல்வித்தகைமை O/L வரை மட்டுமே........

வெளிநாடு செல்லும் பணியாளர்களின் 56 வீதமானவர்களின் கல்வித்தகைமை க.பொ.த. சாதாரண தரம் வரை மட்டுமே என மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் (CHRCD) குருணாகல் கிளை வெளிப்படுத்தியுள்ளது. புலம்பெயர் சுகாதார கொள்கைகள் மற்றும் புலம்பெயர் சேவைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் புலப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டத்திலேயே இந்த விடயம் புலப்பட்டது.

மத்தியகிழக்கு நாடுகளிலும் புலப்பெயரும் பணியாளர்களின் பெரும்பாலானவர்கள் தனியார் நிறுவனங்கள் ஊடாக வெளிநாட்டு செல்வதாகவும், அதன்போது அவர்களின் கல்வித்தகைமை க.பொ.த. சாதாரண தரம் வரை மட்டுமே இருந்தாலும், அவர்களில் 52% வீதமானோர் புலம்பெயர் சேவை உடன்படிக்கையை ஆங்கில மொழியில் கைச்சாத்திடுவதும், ஏனைய பணியாளர்கள் அரபு மொழியில் கைச்சாத்திடுவதும் இதன் போது வெளிப்பட்டது. அதனால், வெளிநாட்டு பணியாளர் ஒருவர் அவ்வாறான புலம்பெயர் சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது அது தொடர்பான உரிய புரிதலின் கீழா என்பது தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

அதேபோன்று, புலம்பெயர் பணியாளர்களின் 60 வீதமானவர்கள் குவைட் நாட்டுக்கும், ஏனையவர்கள் சவூதி அரேபியா மற்றும் ஏனைய மத்தியகிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்வதாகவும், தொழில்வாய்ப்புக்காக புலம்பெயர்வோரில் 70 வீதமானவர்கள் வீட்டு பணிப்பெண்கள் எனவும் இதன் போது புலப்பட்டது.

புலம்பெயர் சுகாதார கொள்கைகள் மற்றும் புலம்பெயர் சேவைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் எழுந்துள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் கலந்துரையாட வேண்டும் எனவும் உரிய அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது குழுவின் தலைவர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுல்லே சுட்டிக்காட்டினார்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றியத்தின் செயலாளர், பாராளுமன்ற பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர அவர்கள் கலந்துகொண்டார்.






Comments