கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை கொலை: 4 வருடங்களின் பின்னர் சந்தேக நபர் கைது.........
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்று நான்கு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் டி சில்வா கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் இரத்மலானையைச் சேர்ந்த 'கொட்டிய' என அழைக்கப்படும் மலிந்து லக்மால் என்பவராவர்.
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா 2018 மே 24 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 'கொட்டிய' கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரஞ்சன் டி சில்வா கொலையுடன் சந்தேக நபர் நேரடியாக தொடர்புடையவர் என்பதும் அங்குலான சயுருபுர அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் தங்கியிருந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய சின்ஹார அமல் சமிந்த சில்வா என்றழைக்கப்படும் 'குடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய உறவினரும்இ பாதாள உலகக் கும்பல் எல்லவல லியனகே தர்மசிறி என்றழைக்கப்படும் 'பாட்டியா'வின் நெருங்கிய கூட்டாளியும் என்பதும் தெரிய வந்துள்ளது.
Comments
Post a Comment