கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழக 40வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள்....
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மலர்ந்திருக்கும் 2023ல் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட தொடர் நிகழ்வுகளை எதிர்வரும் 12ம் திகதி காலை 8.30 மணிக்கு கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கவுள்ளது.
2023 ஆம் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் நிகழ்வுகளை சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அன்றைய தினம் விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட இலச்சினை பதிக்கப்பட்ட டீ சேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளியீட்டு வைக்கப்படவுள்ளது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும் தற்போதைய தவிசாளருமான றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி றகீப், கௌரவ அதிதியாக கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளர் டாக்டர் ஜெமீல் முகம்மட் றிஸான், விசேட அதிதிகளாக இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளான கல்முனை மாநகர ஆனையாளர் அஸ்மி, கல்முனை பிரதேச செயலாளர் லியாகத்அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆசிக் , கல்முனை வடக்கு மேலதிக பிரதேச செயலாளர் அதிசயராஜ் , கல்முனை தலைமையக பொலிஸ் பரீசோதகர் ரம்ஷீன் பக்கீர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் விக்டோறியஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெறவுள்ள இந்நிகழ்வு கழகத்தின் தலைவர் ஜெஸ்மி அவர்களின் ஒருங்கினைப்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியளாளர் அப்துல் ஐப்பார் சமீம் நெறிப்படுத்தலில் நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment