மட்டக்களப்பு ஊறணியில் பஸ் பனை மரத்துடன் மோதி விபத்து ; 3 பேர் படுகாயம்......

 மட்டக்களப்பு ஊறணியில் பஸ் பனை மரத்துடன் மோதி விபத்து ; 3 பேர் படுகாயம்......

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணத்தை மேற்கொண்ட பஸ்வண்டி இன்று (ஜன 13) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மட்டு ஊறணி சந்திக்கு அருகில் வேககட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் பயணித்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 






Comments