முட்டை உற்பத்தி செலவு ரூ. 35 ஆக குறைந்துள்ளது......

 முட்டை உற்பத்தி செலவு ரூ. 35 ஆக குறைந்துள்ளது......

முட்டை உற்பத்திக்கான செலவு 35 ரூபாவாக குறைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கால்நடைத் தீவனப் பொருட்களின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் சோளம், சோயா, புண்ணாக்கு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நுகர்வோர் விவகார ஆணையம் வெள்ளை முட்டை ஒன்றின் கட்டுப்பாட்டு விலை ரூ.44 ஆகவும், சிவப்பு முட்டையின் விலை ரூ.46 ஆகவும் நிர்ணயித்துள்ளது.

கோழிப்பண்ணை உரிமையாளர்கள் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்த விலைக்கே முட்டைகளை விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Comments