சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் 2.5 மில்லியன் டொலர் பணம் திருட்டு....

 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் 2.5 மில்லியன் டொலர் பணம் திருட்டு....

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பணம் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் புகாரளித்துள்ளது.

இணைய குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் டுபாயைத் தளமாகக் கொண்ட ஐ.சி.சி இது பற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடாதபோதும், இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக நம்பகமான வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.சி.சி, அமெரிக்காவில் உள்ள சட்ட அமுலாக்கல் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த மோசடி எப்படி நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

ஐ.சி.சி கணக்கில் இருந்து பணத்தை மாற்றுவதற்கு மோசடி செய்தவர்கள் எந்த வழியில் பணத்தினை மோசடி செய்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. அவர்கள் டுபாயில் உள்ள தலைமை அலுவலகத்தில் யாரையாவது நேரடியாக தொடர்பு கொண்டார்களா அல்லது ஐ.சி.சி விற்பனையாளர் அல்லது ஆலோசகரை குறிவைத்து மிரட்டி அதன் மூலம் பணத்தினை எடுத்தார்களா எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை போன்ற முழு அங்கத்துவ நாட்டுக்கு 2.5 மில்லியன் டொலர் என்பது பெரிய தொகை இல்லை என்றபோதும், ஐ.சி.சியிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒருநாள் அந்தஸ்து கொண்ட ஒரு இணை அங்கத்துவ நாடு பெறும் மானியத்தின் நான்கு மடங்கு இழப்புக்கு இது சமமாகும்.

Comments