கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று 23 ஆம் திகதி ஆரம்பம்!!
கடந்த வருடத்தில் கொவிட் தொற்று நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி நிறைவடைய உள்ளதாகவும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 மத்திய நிலையங்களும் 63 பரீட்சை மத்திய நிலையங்களும் சிங்களம் மொழி மூலம் 2, தமிழ் மொழி மூலம் 9018, ஆங்கில மொழி மூலம் 24 பரீட்சாத்திகளும் ஆண்கள் 3789, பெண்கள் 5187 தனியார் பரீட்சாத்திகள் 1912, பாடசாலை பரீட்சாத்திகள் 7132 இம்முறை பரீட்சைக்கு தோற்வுள்ளனர்
இதனைத்தொடர்ந்து பரீட்சை இடம் பெறும் காலப்பகுதியில் இடையறாத மின் சேவையை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை மின்சாரசபை சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும், 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும், 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
Comments
Post a Comment