மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ............

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு ............

 மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு (02) காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் V.வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் அரச நிர்வாக சுற்றறிக்கைக்கமைவாக 30/2022 சேவை உறுதியுரையும் செய்து கொண்டனர். "நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு" எனும் தொனிப்பொருளுக்கமைவாக பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டு பதவியணி நலன்புரிச் சங்கத்தினால் பால்ச்சோறூம் வழங்கப்பட்டு இப்புது வருட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.





Comments