கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஆண்டு விழா - 2022......

 கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஆண்டு விழா - 2022......

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஆண்டு விழாவானது அமைப்பின் தலைவர் வ.ரமேஸ்சானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தன்னாமுனை மியானி மண்டபத்தில் (29) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஸ்தாபக தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரியுமான வடிவேல் ஜீவானந்தன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில், இறைவணக்கம், வரவேற்புரை மற்றும் தலைமையுரை என்பன இடம்பெற்றதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் கடந்த கால செயற்திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்தோடு இந்நிறுவனத்தின் வளர்ச்சிப்பாதைக்கு அயராது பாடுபட்டு உழைத்தவர்கள் இதன்போது பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பானது பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிட த்தக்கது.
அதிதிகள் உரைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்துள்ளது.
இன் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் நீண்டகாலமாக சேவையாற்றிய தலைவி க.ராஜேஸ்வரி மற்றும் செயலாளராக சிறந்த சேவையினை வழங்கிய பே.நிமாலினி நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.யோகராஜா போன்றோறுக்கு நினைவு சின்னங்களும் பொன்னாடைபோர்த்தி கொளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கிரமத்தில் காலுன்றி தனது மக்கள் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து பிரதேச மட்டத்தில் முன்னெடுத்து தற்போது மாவட்ட மட்டத்தில் காலுன்றி தனது பணிகளை சிறப்பாக மக்கள் சார் வேலைகளை சிறப்பாக முன்னெடுத்து 22வருடங்களை பூர்தி நிறைவினையும் அன்றைய தினம் சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் அமைப்பின் பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





Comments