சீருடைத் துணி மார்ச் 20 ஆம் திகதிக்கு முன் விநியோகிக்கப்படும் - கல்வி அமைச்சர்.....
பாடசாலை மாணவர்களுக்கான வழங்கப்படும் இவ்வருடத்திற்கான சீருடைத் துணி எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடை துணிக்கான தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்வதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்து, அதனை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், சீனாவில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட முதல் தொகுதி துணி வெள்ளிக்கிழமை (13) கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment