எதிர்வரும் 17ம் திகதி வரை தடையின்றிய மின்சாரம்.....
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி வரை தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், உரிய தரப்பினர் இணங்கியுள்ளனர்.
மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
Comments
Post a Comment