மின்கட்டண அதிகரிப்பு ஜனவரி 15 முதல் அமுல்.......
இலங்கை மின்சார சபை தெரிவிப்பு:
அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை வழங்கிய அனுமதியின் பிரகாரம், ஜனவரி 15 ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், 0 – 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவிலிருந்து 400 ரூபா வரையிலும், 31 – 60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550 ரூபா வரையிலும், அதிகரிக்கப்பட்டுள்ளன. 60–90 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 650 ரூபாவாகவும், 90 – 180 அலகுகள் வரையான நிலையான கட்டணம் 1500 ரூபாவாகவும் அமைந்துள்ளன. 180 அலகுகளுக்கு மேல் 1500 ரூபாவாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி 0–30 அலகுகளுக்கு 400 ரூபா, 31–90 அலகுகளுக்கு 550 ரூபா, 90–120 அலகுகளுக்கு 650 ரூபா, 120 – 180 அலகுகளுக்கு 1500 ரூபா என்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment