140க்கும் அதிக அத்தியாவசிய மருந்துகளுக்கு வைத்தியசாலைகளில் பற்றாக்குறை: நோயாளிகள் சிரமத்தில்....

 140க்கும் அதிக அத்தியாவசிய மருந்துகளுக்கு வைத்தியசாலைகளில் பற்றாக்குறை: நோயாளிகள் சிரமத்தில்....

இலங்கையில் புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் முடங்கியதுடன் நோயாளிகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

பற்றாக்குறையாக உள்ள மருந்துகளுக்கு கொள்முதல் கட்டளைகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளன. மருந்து இறக்குமதி செய்யத் தேவையான நடவடிக்கை இந்நிலையில் புற்றுநோயாளர் களுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் இந்தியக் கடன் வரியின் கீழ் கட்டளை செய்யப்பட்டு அந்த 43 மருந்துகளும் இன்னும் பதினைந்து நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பற்றாக்குறையாக உள்ள எஞ்சிய மருந்துகளை இறக்குமதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


 

Comments