Ksc Night - 2022 East Lagoonல் டிசம்பர் 17ல்.....
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் வருடாந்த ஒன்று கூடலும் கௌரவிப்பு நிகழ்வும் டிசம்பர்-17 அன்று மட்டக்களப்பில் தனியார் வீடுதிகளில் ஒன்றான ஈஸ்ட் லகூனில் மாலை 6.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள பிரபல விளையாட்டு கழகங்களில் ஒன்றான கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 2022ம் ஆண்டுக்கான Ksc Night களியாட்ட கொண்டாட்டா நிகழ்வு கழகத்தலைவர் சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் தனியார் விடுதியில் மிகச்சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கழகத்தின் தலைவர் சடாற்சரராஜா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் கழக அங்கத்தவர்கள் தங்கள் குடும்பம் சகிதம் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதுடன் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான சிறப்பு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
Comments
Post a Comment