முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவிட்டு கொடுத்த EPP சுஜி.....

 முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவிட்டு கொடுத்த EPP சுஜி.....

EPPயின் இரண்டாவது கிரிக்கெட் திருவிழாவில் சுஜியின் சகல துறை ஆட்டத்தால் EPP அக்கடமி 121 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுள்ளது. சுஜி மிகச்சிறப்பாக பந்து வீசி 04 பந்து வீச்சு ஓவர்களில் 09 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 07 விக்கெட்டுக்களை கைப்பற்றியும், துடுப்பாபட்டத்தில் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 09 நான்கு ஓட்டங்கள் ஆடங்கலாக 44 பந்து வீச்சுக்களில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்று EPP அக்கடமிக்கு மாபெரும் வெற்றியை தனி மனிதனாக பெற்றுக் கொடுத்துள்ளார்.

இத் தொடரின் முதல் போட்டியில் பங்குபற்றிய EPP அக்கடமியும் மல்வான அக்கடமியும் மோதிக் கொண்டன. முதலில்  துடுப்பெடுத்தாடி EPP அக்கடமி 20 ஓவர்கள் முடிவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சுஜி அவர்கள் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடி 44 பந்து வீச்சுக்களை எதிர் கொண்டு 09 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 57 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை கடந்தார். இவருக்கு துணையாக சஞ்சயன் 20 ஓட்டங்களையும். சாருக்சன் 17 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் மல்வான அக்கடமி சார்பாக மபாஸ், ரம்சான், முஸ்றிப், மஹவ் தலா  ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றி இருந்தனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களம் நுழைந்த மல்வான கிரிக்கெட் அக்கடமி 03 ஓட்டங்களை பெற்ற போது தமது முதலாவது விக்கெட்டனை இழந்தது, இதன் பின் 06 ஓட்டங்கள் பெற்ற போது அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அப்போது சுஜியை பந்து வீச அழைத்தார் அணித்தலைவர் சாருக்சன். அவரின் மிக துள்ளியமான  பந்து வீச்சில் 19 ஓட்டங்கள் பெற்ற போது மல்வான கிரிக்கெட் அக்கடமி மேலும் 03 விக்கெட்டுக்களை இழந்து. இருந்த போதிலும் சுஜித்தின் விக்கெட் வேட்டை நின்றபாடாக இல்லை தொடர்ச்சியாக பந்து வீசி அதன் பின் வந்த சகல விக்கெட்டுக்ளையும் வேட்டையாடி இருந்தார். துடுப்பாட்டத்தில் முஸ்றிப் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டமான 10 எட்டி இருந்தார். பந்து வீச்சில் சுஜி 09 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களையும், சரோன் 07 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் சாருக்சன் 04 ஓட்டங்களுக்கு 01 விக்கெட்டினையும் கைப்பற்றி இருந்தனர்.

இதன் அடிப்படையில்  மல்வான கிரிக்கெட் அக்கடமி 14 ஓவர்களில் 29 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்து இதன் அடிப்படையில் மட்டக்களப்பு நுPP அக்டமி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மதியம் 1.00 மணிக்கான போட்டியில் மட்டக்களப்பு ஈஸ்டன் ஸ்டார் அக்கடமியும் மடம்ப கிரிக்கெட் அக்கடமியும் மோதவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.



Comments