EPP யின் இரண்டாவது பருவ காலத்திற்கான கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.............

 EPP யின் இரண்டாவது பருவ காலத்திற்கான  கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.............

EPP யின் இரண்டாவது பருவ காலத்திற்கான  கிரிக்கெட் திருவிழா 16.12.2022 அன்று முன்னாள் கல்வி வலய பணிப்பாளர் பாஸ்கரன்  அவர்களினால் மிக சிறப்பான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் சடாற்சரராஜா கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான சிவநாதன், கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் சஜிதராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

15 வயதிற்குட்பட்டோருக்கான இத்தொடரில் மட்டக்களப்பு EPP அக்கடமி, மட்டக்களப்பு ஈஸ்டன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி,  மாவனல்ல கிரிக்கெட் அக்கடமி, காலி மாதம்ப கிரிக்கெட் அக்கடமி அணிகள் பங்குபற்றவுள்ளன. (16)ம் திகதியில் நடைபெறும் முதல் போட்டியில் மட்டக்களப்பு EPP அக்கடமியும், மல்வான கிரிக்கெட் அக்கடமியும் மோதுகின்றன.

EPPயின் முதல் பருவ கால கிரிக்கெட் திருவிழாவானது 2019ம் ஆண்டு 13 வயதிற்குட்பட்டோருக்கானதாக நடாத்தப்பட்டது. இத் தொடரில் சிவானந்தா தேசிய பாடசாலை, புனித மிக்கல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் EPP அக்கடமி மோதி இருந்தன. இதில் சிவானந்தா தேசிய பாடசாலை வெற்றி பெற்று வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்போட்டி தொடரானது 16ம் திகதி ஆகிய இன்று ஆரம்பிக்கப்பட்டு 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியுடன் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.











Comments