மீண்டுமொரு கிரிக்கெட் திருவிழாவை புதிய கோணத்தில் ஆரம்பிக்கும் EPP.....

 மீண்டுமொரு கிரிக்கெட் திருவிழாவை புதிய கோணத்தில் ஆரம்பிக்கும் EPP.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட EPP அமைப்பு 2019ம் ஆண்டு சிறார்களுக்கான 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் திருவிழாவை மட்டக்களப்பு நகரத்தில் உள்ள பாடசாலைகளை இணைத்து வெற்றிகரமாக நடாத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது, இதன் இரண்டாம் பகுதி இப்போது மட்டக்களப்ப மாவட்டத்தை விட்டு வெளியில் சென்று ஒரு புதிய பரினாமத்துடன் நடாத்தவுள்ளது.

ஆம் புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் நான்கு அணிகள் மோதும் 15 வயதிற்குட்பட்டோருக்கான கடின பந்து சுற்றுப்போட்டி டிசம்பர் 16, 17 மற்றும் 18ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக EPPயின் இணைப்பாளர் வசந்தமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இச்சுற்றுப்போட்டிகளில் மட்டக்களப்பு EPP கிரிக்கெட் அக்கடமி, மட்டக்களப்பு நியூ ஈஸ்டன் ஸ்டார் கிரிக்கெட் அக்கடமி, மாவனல்ல கிரிக்கெட் அக்கடமி, காலி மாதம்ப கிரிக்கெட் அக்கடமி அணிகள் மோதவுள்ளன. இப்போடிகள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடனும், இளைஞர்களின் தற்போதைய மனநிலையில் விளையாட்டை ஒரு முக்கிய சாதகமான கொண்ட செயற்படுத்துவதற்கு இது உதவுவதோடு, வெளி மாவட்டங்களில் உள்ள விளையாட்டு இளைஞர்களுடனும், கழகங்கங்களுடனும் தொடர்பை ஏற்படுத்த முடியும் என EPPயின் இணைப்பாளர் வசந்தமோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 16ம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ள இச்சுற்றுப் போட்டிகள் 18ம் திகதி முடிவுறுத்தப்படவுள்ளது.


Comments