Cake Award -2022 தங்கம் வென்ற புவனகுமாரி தங்கராஜா....

Cake Award -2022 தங்கம் வென்ற புவனகுமாரி தங்கராஜா....

Srilanka Cake Award -2022 போட்டியானது 2022 நவம்பர் மாதம் 26ம் 27ம் திகதிகளில் (Galadari Hotel) கலதாரி நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையில் உள்ள 500 மேற்பட்ட கேக் (Cake) தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை காட்சிப்படுத்தி இருந்தன. 

 இதில் மட்டக்களப்பின் Cake Walk நிறுவனத்தின் சார்பாக புவனகுமாரி தங்கராஜா கலந்து கொண்டு திருமணத்திற்கான கேக் தயாரிப்பில் (Wedding Cake Category) தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 இவருக்கான விருது வழங்கும் நிகழ்வாகது 03 டிசம்பர் 2022 அன்று கொழும்பு மரினோ பீச் விடுதியில் (Marino Beach Hotel) வைத்து  Dr.F.Rushda Najumudeen அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

Cake Walk  நிறுவனத்தினை கடந்த 04 வருடங்களாக புவனகுமாரி தங்கராஜா அவர்கள் மட்டக்களப்பு கல்லடியில் நடாத்தி வருவதுடன் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 









Comments