மட்டக்களப்பில் இடம்பெற்ற "மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் " தொடர்பான செயலமர்வு...........

 மட்டக்களப்பில் இடம்பெற்ற "மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் " தொடர்பான செயலமர்வு.........

தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையினால் தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள "மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் " தொடர்பான கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ஹரீமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செயலமர்விற்கு கிழக்கு மாகாண ஆளுணர் அனுராதா ஜகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் லக்சிகா மணிக்வோவ (தகவல் மற்றும் ஊடகப்பிரிவு), தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் திட்டமிடல் பணிப்பாளர் சாணி காமலர்கொட, தேசிய சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் ஊடக அதிகாரி தனுஸ்க சேனாரத்ன, மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இச் செயலமர்வின்போது சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளை பெற்றுக்கொள்ளல், மாணவ தலைவர்கள் எவ்வாறாக தமக்கான தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்வது, நிலைபேறான தலைமைத்துவம், நிலைபேறான முகாமைத்துவம், சிறுவர் பாதுகாப்பு தினத்தினை பிரகடனப்படுத்தல் மற்றும் பாடசாலைகளின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குழு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
நாட்டில் 9 மாகாணங்களிலும் இத்திட்டமானது நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், தேசிய ரீதியில் மாணவர் தூதுவர் தேசிய மாநாடு நடாத்தப்படவுள்ளமை, ஜனாதிபதி ஆசிரியர் தூதுவர் விருது மற்றும் ஜனாதிபதி மாணவர் தூதுவர் விருது வழங்கப்படவுள்ளமை தொடர்பாகவும் இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மாணவ தலைவர்கள், அதிபர்கள், பொறுப்பாசிரியர்களும், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட கல்வி திணைக்கள அதிகாரிகள், பொலிசார் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என மேலும் பலர் கலந்துகொண்டனர்.







Comments