மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா!!

 மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா!!

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஒளி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் எற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் (21) இடம் பெற்றது.

அதிதிகளினால் மங்கள ஒளிவிளக்கு ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பமாகியது. பிரதம விருந்தினர்களாக அன்னமாள் ஆலய அருட்தந்தை சி.வி.அன்னதாஸ் மற்றும் அருட் தந்தை க.ஜேகதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் உலகின் சாந்தி சமாதானம் பிறக்க வேண்டும் என்பதற்காக அவதரித்த கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக ஒளி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், நத்தார் இன்னிசை கரோல் கீதம் இசைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நவரூபரஞ்சனி முகுந்தன், திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, சமுர்த்தி பணிப்பாளர் புவனேந்திரன், மாவட்ட செயலக கணக்காளர் வினோத், புள்ளி விபரவியளாலர் ஜெய்தனன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்துகொண்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.


















Comments