பிறைந்துறைச்சேனை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் வருடாந்த நிகழ்வு....

 பிறைந்துறைச்சேனை சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் வருடாந்த நிகழ்வு....

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை 206/C கிராம சேவகர் பிரிவு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் (08)ம்திகதி அன்று சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  தலைவர் எம்.சுபைர்  தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரிப், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.இர்பான், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின்  தலைவர்கள்,  பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் 20 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும்  3 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் சொந்த நிதி மூலம் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.







Comments