வெற்றிகரமாக முடிவடைந்த சிவானந்தா பாடசாலை வைத்தியர்களின் மருத்துவ முகாம்......

 வெற்றிகரமாக முடிவடைந்த சிவானந்தா பாடசாலை வைத்தியர்களின் மருத்துவ முகாம்......

சிவானந்த தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக சிவானந்தா தேசிய பாடசாலையின்  பழைய மாணவர் சங்க தலைவர் V.வாசுதேவன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்த தெரிவிக்கையில்  சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி கற்று தற்போது வைத்தியராக கடமையாற்றும் எம்மவர்களுடன், பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும் எமது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் வைத்திய தேவையுடைய மாணவர்களுக்கும் மருத்துவ முகாமானது நடைபெற்றதாக தெரிவித்தார்.

 இன் நிகழ்விற்கு மட்டக்களப்பு ராமகிருஷ்ணா மிஷன் சுவாமி அவர்கள் வருகை தந்து ஆசியுரை வழங்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சார், சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் போன்றோர் கலந்து கொண்டு தம் அர்பணிப்பான சேவையை வழங்கி இருந்தனர். 

சிவானந்தா பாடசாலையில்  கல்வி கற்று தற்போது மருத்துவ பிரதிநிதிகளாக உள்ளவர்களான சிவானந்தா பாடசாலையின்  பழைய மாணவர்களே  இதற்கான அனுசரணையை வழங்கியதுடன் முழுமையாக  நிகழ்விலும் கலந்து கொண்டு உதவியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த வைத்திய முகாம் ஒரு குறுக்கியகாலத்தில் ஏற்பாடு செய்ததன் காரணமாக சில வைத்தியர்கள் சமூகம் அளிப்பதில் சிக்கல் நிலை உருவாகியிருந்தது. இருந்த போதிலும் இவ் வைத்திய  முகாமானது இனிவரும் காலங்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை நடத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னை உருவாக்கிய பாடசாலைக்கு ஓர் அர்ப்பணிப்பான உன்னத சேவையை வழங்கி இருக்கின்றார்கள் சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற வைத்தியர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 















Comments