அரசாங்க அதிபர் முன்னிலையில் வீட்டுத்தோட்ட பயிர்கள் வழங்கி வைப்பு!!

 அரசாங்க அதிபர் முன்னிலையில் வீட்டுத்தோட்ட பயிர்கள் வழங்கி வைப்பு!!

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் முன்னிலையில் வீட்டுத்தோட்ட பயிர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (29) அன்று மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுத்துவ வரும் விவசாய உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை மேற்கொள்வதனை ஊக்குவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பனிச்சையடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள எச்.ஆர். ஒருங்கிணைந்த விவசாய பண்னையில் பயிரிடப்பட்ட வீட்டுத்தோட்ட பயிர்களான மிளகாய்,கத்தரி,தக்காளி போன்ற பலன் தரும் கன்றுகள் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கி வைக்கப்பட்டது.
வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதினால் தமது அன்றாட உணவு தேவையினை பூர்த்திசெய்து கொள்ளக்கூடியதாக இருப்பதனை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் போது எச்.ஆர். ஒருங்கிணைந்த விவசாய பண்னையின் உரிமையாளர் நாகராஜா வீட்டு தோட்ட பயிர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து அவற்றை எவ்வாறு பேணி பாதுகாக்க வேண்டும் என்று தெளிவு படுத்தியதுடன் பயிர்களுக்கு ஏற்படும் தொற்றுகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலும் தமது வீட்டுத்தோட்ட பயிர்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







Comments