பிள்ளையாரடி தமிழ்ச்சங்க மண்டபத்தில் அண்ணாவிமார்களுக்கான மாநாடு...............
பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையில் பல்துறை ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்தவர்களான அண்ணாவிமார்களுக்கான மாநாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இவ்வண்ணாவிமார் மாநாடு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன் தலைமையில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் நேசராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்
நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ராகுலநாயகி மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சுதாகர் மற்றும் இவ்வண்ணாவிமார் மாநாட்டிற்கு கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரும், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமான பவளகாந்தன் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் ரஞ்சிதமூர்த்தி, பேராசிரியர் மௌனகுரு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பிரிவின் முன்னால் மேலாளர் பாலசுகுமார் மற்றும் அண்ணாவியார் தலைக்கூத்தர் பொன்னம்பலம் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
இந்நிகழ்வில் தென்மோடி வரவாட்டம், வடமோடி வரவாட்டம், விலாசம் வரவாட்டம், நகைச்சுவை கூத்தின் வரவாட்டம் ஆகிய பாரம்பரிய கலை அம்சங்கள் அரங்கேற்றப்பட்டதுடன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் தங்கராசா மலர்ச்செல்வனின் தொகுப்பில் உருவான ‘தெய்’.என்ற சிறப்பு நூல் வெளியீடு இடம்பெற்றதுடன், முதல் நூல்ப்பிரிதியினை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரண்யா சுதர்ஷனினால் வழங்க வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின்போது நான்கு அண்ணாவிமாருக்கு தலைக் கூத்தர் விருதும், நான்கு அண்ணாவிமாருக்கு மாண்புறு விருதும் மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான இளம் அண்ணாவிமார் விருது 43 அண்ணாவிமாருக்கும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment