அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு..........

 அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வு............

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், சமூக நலன்புரி சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.
உதவிகள் கிடைக்க வேண்டிய குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டும் தகுதியற்றவர்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய, பயனாளர்களின் பட்டியலை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கான பதிவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, செம்மைப்படுத்தப்பட்ட புதிய ஆவணத்திற்கு அமைய 35 இலட்சம் குடும்பங்கள் அரச உதவி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்

Comments