மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்தரையாடல்......
மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் (29) அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடலின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளும் போது ஏற்படும் நிர்வாக எல்லை பிரிப்புக்கள் தொடர்பான பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்துக்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகளினால் முன் மொழியப்பட்டு அதன் சாத்திய வள நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் பொருத்தமான தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் எல்லை நிர்ணயம் தொடர்பாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னால் இராஜாங்க அமைச்சர் அமிர்அலி, முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் தனிப்பட்ட செயளாலர் த.தஜிவரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஜெய்தன், பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் , உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ், துரைசார் நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment