சிலோன் நேர்சிங் கல்லூரி தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு......

சிலோன் நேர்சிங் கல்லூரி தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு......

மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு (10)ம் திகதி மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவித்து பட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மலர் மாலைகள் அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், ஒருநிமிட இறை வணக்கத்தோடு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு அதிதிகளினால் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
சிலோன் நேர்சிங் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ.மியூரியா டிலானியின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், கலாச்சார நடனம் இடம்பெற்றதுடன் சிலோன் நேசிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவித்து பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விசேடமாக நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
இதன் போது பிரதம அதிதி உற்பட ஏனைய அதிதிகள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டிருந்ததுடன், சுகாதார அமைச்சின் பிரதி பொது நிர்வாக பணிப்பாளர். டாக்டர்.ஹேமந்த ஹேரத், வைத்திய அதிகாரிகள், தாதி உத்தியோகத்த உயர் அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் கௌரவம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.











Comments