விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மகேசன் நியமனம்.......
யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலாளராக கடந்த 17.02.2020 தொடக்கம் 31.12.2022 வரை மாவட்ட மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையில் 32 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள உயர்திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் அரச நிர்வாக சேவையின் விசேட தரத்தில் உள்ள சிரேஷ்ட அதிகாரி ஆவார். யாழ் மாவட்டச் செயலாளராக கடமையேற்க முன்னர் மகேசன் அவர்கள் பல அரச நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்துள்ளார். குறிப்பாக பிரதேச செயலாளராக ,மேலதிக அரசாங்க அதிபராக , வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் அலுவலக பணிப்பாளராக, கென்ய நாட்டின் Minister Counsellor ஆக, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளராக, மற்றும் நிதி பொருளாதார அபிவிருத்தி கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக உயர்பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment