மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக அருளானந்தம் ரமேஷ் தெரிவு!!

 மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக அருளானந்தம் ரமேஷ் தெரிவு!!

மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் 2023ம் ஆண்டுக்கான மாவட்ட கமநல அபிவிருத்தி நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் மட்டக்களப்பு கமநல திணைக்களத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத் தலைமையில் இடம்பெற்ற நிர்வாக சபைத் தெரிவுக்குழு கூட்டத்தில் 17 விவசாய கமநல அமைப்புக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 2023ம் ஆண்டிற்கான 34 உறுப்பினர்களைக் கொண்ட புதிய மாவட்ட கமநல அபிவிருத்தி நிர்வாக சபைத் தெரிவு ஏகமனதாக இடம்பெற்றுள்ளது.
2023ம் ஆண்டிற்கான மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக அருளானந்தம் ரமேஷ் தெரிவு செய்யப்பட்டதுடன், புதிய செயலாளராக ச.சந்திரமோகன், புதிய பொருளாளராக இ.கிரேஸ்குமார், புதிய உபதலைவராக எம்.எஸ்.எம்.பசீர், புதிய உப செயலாளராக ஜெ.நிரஞ்சனகுமார் உள்ளிட்ட 29 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாகசபை இதன்போது தெரிவு செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவர் உரையாற்றியதனைத் தொடர்ந்து தலைவர் உள்ளிட்ட புதிய நிருவாகிகளை முன்னால் தலைவர் உள்ளிட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Comments