ஒரே நேரத்தில் கலால் திணைக்களத்தில் பதவி உயர்வு பெற்ற மட்டு மைந்தர்கள்.....

 ஒரே நேரத்தில் கலால் திணைக்களத்தில் பதவி உயர்வு பெற்ற மட்டு மைந்தர்கள்.....

இலங்கை கலால் திணைக்களத்தில் ஒரே நேரத்தில் உதவி ஆணையாளர்களாக மட்டக்களப்பின் மைந்தர்களான செல்வராஜா ரஞ்சன் அவர்களும் சண்முகம் தங்கராஜா அவர்களும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கலால் திணைக்களத்தில் அத்தியட்;சகராக பதவி வகித்த செல்வராஜா ரஞ்சன் அவர்கள் ஊவா மாகான உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றும், அம்பாறை மாவட்ட கலால் திணைக்களத்தின் அத்தியட்சராக பதவி வகித்த சண்முகம் தங்கராஜா அவர்கள் கிழக்கு மாகான உதவி ஆணையாளராக பதவி உயர்வும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்பு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.

இவர்கள் 01.01.2023 அன்று தொடக்கம் தங்கள் புதிய பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோக பூர்வ கடிதத்தை நேற்று (21) அன்று பெற்றுக் கொண்டனர்.

இவர்களுககு மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.





Comments